banner-image overlay

வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை

சிங்கர் பினான்ஸ் வெஸ்டேர்ன் யூனியன் சேவை மூலமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்

விரைவான மற்றும் நம்பகமான பணப் பரிமாற்ற சேவை

image

உங்களது அன்பிற்குரியவர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கும் பணத்தை, எமது வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பணத்தை ஓரிரு நிமிடங்களில் பெற்றுக்கொள்வதற்கு நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கர் பினான்ஸ் காட்சியறைக்கும் வருகை தாருங்கள். எவ்விதமான தாமதங்களுமின்றி உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தவாறு, எமது சௌகரியமான மற்றும் விரைவான சேவையை அனுபவியுங்கள்.  

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் தகைமை

  • உலகிலிருந்து சில நிமிடங்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ளல்.  
  •  சிரமமற்ற வாடிக்கையாளர்கள் சேவை.
  • நீட்டிக்கப்பட்ட கிளைத் தொழிற்பாட்டு நேரம் (திங்கள் - வெள்ளி மு.ப 8.30 - பி.ப 5.00, சனி மு.ப 8.30 - பி.ப 12.30)
  • நாடளவிய கிளை வலையமைப்பு
  • இலவச டெபிட் அட்டை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதியுடன் சேமிப்புக் கணக்கொன்றைத் திறக்கும் வசதி.  
  • கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் அனைத்திற்கும் பணத்தை அனுப்புகின்றவர் பொறுப்பேற்பதுடன், பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது பெற்றுக்கொள்பவர்/பயனாளி எவ்வித கட்டணங்களையும் செலுத்த தேவையில்லை.

பணத்தைப் பெற என்ன தேவை?

பின்வரும் விபரங்களை நீங்கள் வழங்க வேண்டும்:

•    MTCN இலக்கம் (பணப் பரிமாற்ற கட்டுப்பாட்டு இலக்கம்)

•    அனுப்பியவரின் முழுப் பெயர்

•    பணம் எந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதோ அந்த நாட்டின் விபரம்

•    பயனாளிக்கு கிடைக்க வேண்டிய தொகை (அண்ணளவாக.)

தேவையான ஆவணங்கள்

  • தேசிய அடையாள அட்டை(இலங்கை பிரஜைகள்)

  • செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்(இலங்கை பிரஜைகள்)

  • செல்லுடியாகும் கடவுச்சீட்டு(இலங்கை பிரஜைகள்/இலங்கை பிரஜைகள் அல்லாதோர்)

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை

இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.