திரு. அரவிந்த பெரேரா
பணிப்பாளர் சபைத் தலைவர்/நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையின் தலைவராக 2017 டிசம்பர் 7 அன்று நியமிக்கப்பட்டார்.
திரு. அரவிந்த பெரேரா அவர்கள் வங்கித்துறையில் 39 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், 2021 ஜனவரி 1 முதல் சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். தற்சமயம் அவர் றோயல் செரமிக்ஸ் லங்கா பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
பான் ஏசியா வங்கியின் பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவராகவும், ஹேலிஸ் பிஎல்சி, Hayleys Aventura (Pvt) Ltd, Hayleys Advantis Ltd, Fentons Ltd, Rocell Bathware Ltd மற்றும் SNAPS Residencies (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.
Institute of Engineers (Sri Lanka) (MIESL) ன் அங்கத்தவரான திரு. பெரேரா அவர்கள், ஒரு பட்டயப் பொறியியலாளரும் Chartered Engineer (C.Eng.) ஆவார். Chartered Institute of Management Accountants (UK) (FCMA) ன் சக அங்கத்தவராகவும், Institute of Bankers– Sri Lanka (FIB) ன் சக அங்கத்தவராகவும் அவர் உள்ளதுடன், முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு கற்கைநிலையத்தில் (Post Graduate Institute of Management) வணிக நிர்வாக முதுமாணி (MBA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
திரு. பெரேரா அவர்கள் Asian Banker சஞ்சிகையால் “CEO Leadership Achievement Award 2016” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் Postgraduate Institute of Management Alumni (PIMA) ன் மதிப்புமிக்க “Platinum Honours - 2014” விருதையும் பெற்றுள்ளார். Association of Professional Bankers இடமிருந்து கௌரவ ஆயுட்கால உறுப்புரிமையுடன், “Award for the Outstanding Contribution to the Banking Industry - 2015” என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.